தமிழர்களை இழிவாக பேசிய ரஜினிக்கு எதிர்ப்பு..! கோவையில் த.பெ.தி.க போராட்டம்!

நடிகர் ரஜினிகாந்த் தமிழர்களை இழிவாக பேசியதாக தந்தை பெரியார் திராவிட கட்சியை சேர்ந்தவர்கள் கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னையில் ரஜினி, கடந்த 4 நாட்களாக ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து வந்தார். அப்போது தமிழகத்தில் இருக்கின்ற சிஸ்டம் சரிவர இயங்கவில்லை. விரைவில் நாம் போருக்கு தயாராக வேண்டும் என்று  ரசிகர்களிடையே பேசினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கோவையில் தந்தை பெரியார் திராவிட கட்சியினர் 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் பின்னர் ரஜினியின் உருவப்படத்தை தீயிட்டு கொளுத்தினர். இந்த சம்பவத்தையடுத்து போலீசார் அவர்கள் அனைவரையும் கைது செய்து வேனில் அழைத்து சென்றனர்.

Related Topics:Online tamil News