நீட் தேர்வு ரத்து? சி.பி.எஸ்.இ.க்கு உயர்நீதிமன்றம் ஆணை!

இந்திய மருத்துவ மேற்படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த 7ம் தேதி நாடுமுழுவதும் நடைபெற்றது. இந்தத் தேர்வில், மொழிவாரியான வினாத்தாள்களில் வேறுபாடுகள் காணப்பட்டதாக ஏராளமான மாணவர்களும் கல்வியாளர்களும் தங்களது புகார்களை தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், சூர்யா, சித்தார்த் உள்ளிட்ட 9 மாணவர்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்தனர். இதில், நீட் தேர்வில் வெளியான வினாக்கள் முற்றிலும் மாறுபட்டிருந்தன. அனைத்து மாநிலங்களிலும் ஒரே மாதிரியான வினாக்கள்தான் இருக்க வேண்டும். ஆனால் தமிழில் முற்றிலும் மாறுபட்டிருந்தன. எனவே, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். முடிவுகளை வெளியிடவும் தடை விதிக்க வேண்டும் என மனுதாரர்கள் கோரியிருந்தனர்.

இந்த வழக்கு மீதான விசாரணை மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் இன்று நடைபெற்றது. இந்த விசாரணையில், நீட் தேர்வின் அடிப்படை தேர்வை ரத்து செய்ய முடியாது. நீட் தேர்வு குறித்து சிபிஎஸ்இ, இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் மத்திய சுகாதாரம்  ஆகிய துறைகளுக்கு  ஒரு வாரத்தில் பதிலளிக்க உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.

Related Topics: Online Tamil News