போலி நிறுவனங்கள் மூலமாக பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு.. வசமாக மாட்டிக்கொண்ட விவேக்!

jaya tv ceo vivek
போலி நிறுவனங்கள் மூலமாக பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு.. வசமாக மாட்டிக்கொண்ட விவேக்!

போலி நிறுவனங்கள் மூலமாக பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு.. வசமாக மாட்டிக்கொண்ட விவேக்!

தமிழகத்தில் கடந்த 4 நாட்களாக சசிகலா உறவினர்கள் மற்றும் அவருக்கு நெருங்கிய நண்பர்களிடம் வருமானவரித்துறை சோதனை நடத்தியது. இதில் 50 போலி நிறுவனங்கள் மூலம் இமாலய வரி ஏய்ப்பு செய்திருப்பதாக வருமானவரித்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

பெரும்பாலான ஆவணங்கள் அனைத்தும் இளவரசி மகன் விவேக் மற்றும் மகள் கிருஷ்ணப்பரியா வீட்டில்தான் கைப்பற்றப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை தெரிவிக்கின்றது.

இதில் ஜெயா டிவி, ஜாஸ் சினிமாஸ் வசமாக சிக்கி விழிபிதுங்கிக் கொண்டிருக்கிறார் விவேக் என்கின்றன வருமான வரித்துறை வட்டாரங்கள்.

அதே போன்று கிருஷ்ணப்பிரியா வீட்டிலும் நிறைய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதில் இருவருமே மாட்டிக்கொண்டு வசமாக சிக்கி தவித்து வருகின்றனர்.

Related Topics:Chennai news