லவ் ஜிகாதில் சிறுமியை காப்பாற்ற வாலிபர் வெட்டி கொலை.!! வீடியோவை வெளியிட்ட கொலை வெறியன்..!!

லவ் ஜிகாதில் சிறுமியை காப்பாற்ற வாலிபர் வெட்டி கொலை.!! விடியோவை வெளியிட்ட கொலை வெறியன்..!!

மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் முகமது பட்டா சேக் . இவர் ராஜஸ்தானில் தங்கி பணி புரிந்ததாக தெரிகிறது.

முகமதுவை ஒருவர் கோடாரியால் கடுமையாக தாக்கி பின்னர் மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்து எரித்து அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவியதையடுத்து காவல்துறை அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை நடத்தினர்.

அப்போது இந்த சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ராஜ் நகரில் நடந்தது தெரிய வந்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பாதி எறிந்த நிலையில் இருந்த உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விடியோவில் ஒருவர் முகமதுவின் உடலில் பல்வேறு இடங்களில் கோடாரியால் வெட்டுகிறார்.

தன்னை வீட்டுவிடுமாறு முகமது கெஞ்சியும் அவரை அந்த நபர் தாக்குகிறார்.

தாக்கப்பட்ட முகமது மயக்கமடைந்த உடன் அவர் மீது மண்ணெண்ணை ஊற்றி தீ வைக்கிறார்.இந்தக் கொடூர காட்சியை முழுமையாக படம் பிடித்து சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மற்றோரு வீடியோவை பதிவிட்ட அந்த நபர் அதில் லவ் ஜிகாதில் இருந்து சிறுமியை காப்பாற்றவே இப்படி செய்ததாக தனது குற்றத்தை நியாயப்படுத்தி ஒரு வீடியோ பதிவையும் வெளியிட்டுள்ளார்.

இதனையடுத்து குற்றம் சாட்டப்பட்ட ஷம்பூநாத் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Related Topics:Chennai News