நட்டு கழன்று.. காலில் விழுந்து கெஞ்சிய ஜெயக்குமார்.. போட்டுத்தாக்கிய தமிழ்ச்செல்வன்!

bold week minister jayakumar
நட்டு கழன்று.. காலில் விழுந்து கெஞ்சிய ஜெயக்குமார்.. போட்டுத்தாக்கிய தமிழ்ச்செல்வன்!

நட்டு கழன்று.. காலில் விழுந்து கெஞ்சிய ஜெயக்குமார்.. போட்டுத்தாக்கிய தமிழ்ச்செல்வன்!

அமைச்சர் ஜெயக்குமார் நட்டு கழன்றவர் எனவும் அவர் பதவிக்காக சசிகலா காலில் விழுந்தார் என்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ தங்க தமிழ்ச்செல்வன் பரபரப்பான தகவலை வெளியிட்டார்.

இது தொடர்பாக அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்ததாவது: தமிழகம் முழுவதும் டெங்கு பாதிப்பால் பல்வேறு மக்கள் காய்ச்சலால் அவதி பெற்று வருகின்றனர்.

ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அரசு அதை பற்றி கவலைப்படாமல் உள்ளது. எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் எங்களுக்கு நல்ல தீர்ப்பு வரும்.

மேலும், ஒரு நிருபர் ஜெயக்குமார் பற்றி கேள்வி எழுப்பினார். அப்போது அதற்கு பதிலளித்த தங்க தமிழ்ச்செல்வன், ஜெயக்குமார் ஒரு நட்டு கழன்றவர். அவர் பதவி சுகத்திற்காக சசிகலா காலில் விழுந்து கெஞ்சினார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Topics:Chennai online news