பள்ளிகளில் சீருடை, புத்தகம் விற்கத் தடை; சிபிஎஸ்இ அதிரடி உத்தரவு!

டெல்லியில் உள்ள ஒரு சிபிஎஸ்இ பள்ளியில் பெண்ணின் உடல் அமைப்பு குறித்த சர்ச்சைக்குரிய பாடம் இடம்பெற்றதால் பல்வேறு தரப்பினர் கடும் கண்டனத்தை தெரிவித்து வந்தனர். இது சம்பந்தமாக சிபிஎஸ்இ நிர்வாகம் தரப்பில் விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், தற்போது சிபிஎஸ்இ பள்ளிகளில் புத்தகங்கள் மற்றும் பிற பொருட்களை விற்க தடை விதித்துள்ளது. அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளுக்கும் சுற்றறிக்கையும் அனுப்பியுள்ளது. இந்த அறிவிப்பால் பள்ளி வளாகத்தில் உள்ள கடைகளை மூட அந்தந்த பள்ளி நிர்வாகம் தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் பள்ளிகளைப் பற்றி சிபிஎஸ்இ புகார்கள் பெற்றப்பட்டுள்ளதாகவும், இதனால் சிபிஎஸ்இ பள்ளிகளில் எந்த வகையிலும் வணிக ரீதியாக நடைபெறவில்லை என்பதை உறுதிப்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது. மீறினால் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் அல்லது அங்கீகாரமே ரத்து செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

Related Topics: Online Tamil News