அம்மாடி இதுதான் காதலா.. பிச்சைக்காரனை காதலித்து மணந்த விபசாரி

பாலியல் தொழிலுக்கு யாரும் விரும்பி வருவதில்லை. காலத்தின் கட்டாயத்தால் சிலர் வருகிறார்கள். பலர் தள்ளப்படுகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு பெண்தான் பேகம்.

இவரது பெற்றோர் யார்? எப்போது பிறந்தார் என எதுவுமே இவருக்கு தெரியாது. தெருக்களின் ஓரத்தில்தான் வாழ்க்கையை கழித்துள்ளார். சாலையில் தங்கியபோது பல ஆண்கள் அவரிடம் தவறாக நெருங்குவார்கள். அவர்களிடம் இருந்து போராடி காப்பாற்றி கொண்டுள்ளார்.

ஆனால், சந்தர்ப்ப சூழ்நிலையால் வேறு வழியின்றி பாலியல் தொழிலில் ஈடுபட்டார். அந்த தொழிலில் இருந்து வெளியே வந்தால் யாரும் உதவ மாட்டார்கள் என்பது தெரிந்தும் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார்.

இறுதியாக ஒருநாள் மாலைப்பொழுது அங்கிருந்து வெளியேறி வந்தார். அப்போது நன்றாக மழை பெய்து கொண்டிருந்தது. மழைக்காக ஒரு மரத்தடியில் ஒதுங்கினார். அந்த மரத்தின் மற்றொரு பக்கத்தில் பிச்சைக்காரர் ஒருவர் தனது சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டிருந்தார். மழை நின்றபோது எங்கே செல்வது என தெரியாமல் கதறி அழுதுள்ளார்.

அப்போது பிச்சைக்காரர் தனது நாற்காலியை சத்தமாக இயக்கி உள்ளார். சத்தம் கேட்டு திரும்பி பார்த்தார் பேகம்.  தன்னிடம் பணம் இல்லை என கூறினார். உடனே அவர் தன்னிடம் இருந்த 50 ரூபாயை கொடுத்து பாதுகாப்பாக இரு என்று சொல்லி விட்டு மழையில் மெதுவாக சென்று விட்டார்.

முதன் முதலாக ஒரு ஆண்மகன் தன்னிடம் எதுவும் எதிர்பார்க்காமல் பணம் கொடுத்து சென்ற தருணம் அது. அக்கணமே அந்த பிச்சைக்காரரின் மேல் ஒரு வித ஈர்ப்பு வந்துள்ளது. அதன்பிறகு சில நாட்கள் கழித்து அந்த பிச்சைக்காரரை அதே மரத்தடியில் பார்த்து உள்ளார்.

அந்த பிச்சைக்காரர் தான் ஒரு ஊனமுற்றவன் என்ற காரணத்திற்காக தன்னை மனைவி விட்டு சென்று விட்டார் என்று கூறி உள்ளார். அதன்பிறகு அவர் மேல் இருந்த மரியாதை பேகத்திற்கு காதலாக மாறியது. பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இப்போது இருவரும் சில சமயம் ஒருவேளை சாப்பாட்டிற்கே கஷ்டப்பட்டாலும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள்.

Related Topics: Chennai News