பெட்டி பெட்டியாக பழைய நோட்டுக் குவியல் ; சென்னையில் ரூ.45 கோடி பறிமுதல்..! மேலும் பல கோடிகள் சிக்க வாய்ப்பு!!

சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள ராமலிங்கம் அண்ட் கோ என்ற ஜவுளிக்கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் போலீசாரின் சீருடைகள் விற்பனை செய்துவருகின்றனர்.

இந்நிலையில், இங்கு பழைய ரூபாய் நோட்டுக்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. புகாரின் பேரில் தனிப்படை போலீசார் இன்று இந்த கடையில் சோதனையில் ஈடுபட்டனர். மேலும், கடையின் உரிமையாளர் வீட்டிலும் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த அதிரடி சோதனையில் பழைய ரூபாய் நோட்டுக்களான ரூ.500 மற்றும் ரூ.1,000 கட்டுக்கட்டாகவும், பெட்டி பெட்டியாகவும் இருந்துள்ளதை தனிப்படை போலீசார் கண்டுபிடித்தனர். மொத்தம் ரூ.45 கோடி பழைய ரூபாய் நோட்டுக்கள் அனைத்தையும் போலீசார் பறிமுதல் செய்து 3 வேன்களில் ஏற்றிச் சென்றனர்.

ரூ.45 கோடி என்பது போலீசாரின் முதற்கட்ட சோதனையில் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நடைபெறும் சோதனைகளில் மேலும் பல கோடிகள் சிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

Related Topics: Chennai News Live