10ம் வகுப்பு தேர்வு நூற்றுக்கு நூறு எடுத்தவர்களின் விவரம்: கடந்த ஆண்டை விட குறைவு

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் 94.4 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10 லட்சத்து 38 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். இதில் 9 லட்சத்து 26 ஆயிரத்து 711 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் 0.8 சதவீதம் தேர்ச்சி வீதம் மட்டும் அதிகரித்துள்ளது. ஆனால் நூற்றுக்கு நூறு எடுப்பவர்களின் சதவீதம் கணிசமாக குறைந்துள்ளது. இந்த முறை தமிழில் 69 பேர், கணிதத்தில் 13 ஆயிரத்து 759 பேரும், அறிவியல் பாடத்தில் 17 ஆயிரத்து 481 பேரும், சமூக அறிவியல் பாடத்தில் 61 ஆயிரத்து 115 பேரும் ஆங்கிலத்தில் யாரும் 100க்கு 100 எடுக்கவில்லை. கடந்தாண்டில் தமிழில் 73 பேரும், ஆங்கிலத்தில் 51 பேரும், கணிதத்தில் 18 ஆயிரத்து 754 பேரும், சமூக அறிவியலில் 39 ஆயிரத்து 898 பேரும், அறிவியலில் 18 ஆயிரத்து 642 பேரும் நூற்றுக்கு நூறு பெற்றுள்ளனர். கடந்தாண்டை ஒப்பிடும் போது நூற்றுக்கு நூறு எடுப்பவர்களின் அளவு இந்த முறை கணிசமாக குறைந்துள்ளது.

realted topic :chennai news