ஆபத்தான பயணம்! மாணவர்களுக்கு விடிவுகாலம் பிறக்குமா?

தமிழகம் முழுவதும் ஏராளமான கிராமங்களில் போதிய பஸ் வசதி இல்லாமல் பொதுமக்கள் தவித்துவருகின்றனர். அதேபோல் கிராமங்களிலிருந்து நகரத்திற்கோ அல்லது அருகிலுள்ள பெரிய ஊர்களுக்கோ பள்ளிக்கு செல்லும் மாணவர்களின் நிலைமையோ கேள்விக்குறியாக உள்ளது.

அதற்கு எடுத்துக்காட்டாக, கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையிலிருந்து பெட்டமுகிளம் என்ற ஊருக்கு அரசு பேருந்து நேற்று காலை புறப்பட்டது. போதிய பஸ் வசதியில்லாமல் அந்த பஸ்சில் மாணவர்கள் கூரைமேல் உட்கார்ந்தும், படியில் தொங்கியும் பயணம் செய்வது மிகவும் அதிர்ச்சியை அளிக்கிறது.

இந்த வழித்தடத்தில் பேருந்துகளை இயக்கவும், ஆபத்துகளை தடுக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Topics: Online Tamil News Live

LEAVE A REPLY