நாளை மாலை 5 மணிக்கு ஒன்று சேருங்கள்.. தமிழர்களின் உணர்வுகளை தட்டி எழுப்பிய சிம்பு

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனை கண்டித்து தமிழகத்தில் தமிழர்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்த துவங்கி உள்ளனர்.

இந்த நிலையில் நடிகர் சிம்பு இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது,
ஜல்லிக்கட்டு நமது பாரம்பரியம், கலாசாரம். இதற்காக யாரும் தனித்தனியாக போராட வேண்டாம். அனைவரும் ஒன்று சேருங்கள். நாளை மாலை 5 மணிக்கு எனது வீட்டின் முன் 10 நிமிடம் மவுன போராட்டம் நடக்கிறது. அதில் கலந்து கொள்ளுங்கள்.

இல்லை என்றால் தன்மான மிக்க தமிழர்கள் எங்கு இருந்தாலும், வீட்டில், அலுவலகத்தில், சாலையில் இருந்தாலும் 5 மணிக்கு 10 நிமிடம் மவுன போராட்டம் நடத்துங்கள். ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்றார்.

Related Topics: Chennai News Live

 

LEAVE A REPLY