ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம்! பிரதமர் மோடிக்கு சசிகலா கடிதம்!

பொங்கல் பண்டிகை நெருங்கிவரும் நிலையில் ஜல்லிக்கட்டை நடத்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் அணில் தவேவை டெல்லியில் அதிமுக எம்பிக்கள் இன்று நேரில் சந்தித்து மனு கொடுத்தனர்.

இதனைத்தொடர்ந்து, அதிமுகவின் பொதுச்செயலாளரான வி.கே.சசிகலா பிரதமருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், தமிழர்களின் பாரம்பரியத்துடன் தொடர்புடையது ஜல்லிக்கட்டு எனவும், பொங்கல் பண்டிகையையொட்டி, ஜல்லிக்கட்டுவை நடத்த மத்திய அரசு அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்றும் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் காளைகள் துன்புறுத்தப்படுவதில்லை என்றும், விலங்குகள் காட்சியபடுத்த கூடாத விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்க வேண்டும் பிரதமர் மோடிக்கு சசிகலா கடிதம் எழுதியுள்ளார்.

Related Topics: Chennai News Live

LEAVE A REPLY