சசிகலா இனிமேல் சகுந்தலா என அன்போடு அழைக்கப்படுவார்.. பொன்னையன் பேட்டியால் பரபரப்பு

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுகவின் பொதுசெயலாளர் பதவி காலியாக இருந்தது. எனவே மூத்த நிர்வாகிகள் அவரது தோழி சசிகலாவை அதிமுகவின் பொதுச்செயலாளராக பதவி ஏற்குமாறு வலியுறுத்தினர். றுள்ளார். இதனை தொடர்ந்து சசிகலா சசிகலா பொதுச்செயலாளராக பதவி ஏற்றுள்ளார்.

ஆனாலும் அதிமுக நிர்வாகிகள் சசிகலா முதல்வராக பதவி ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். அதன்படி சசிகலா விரைவில் முதல்வராக பதவி ஏற்பார் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் பொன்னையன் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அதில் சசிகலா குறித்து கேட்கும்போது பொன்னையன் அவரது பெயரை சின்னம்மா சசிகலா என்பதற்கு பதிலாக சகுந்தலா என்று கூறினார்.

ஒரு முறை அல்ல பல முறை சின்னம்மா சகுந்தலா என அழுத்தம் திருத்தமாக கூறினார். இது அதிமுகவினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஒரு மூத்த தலைவரே பொதுச்செயலாளர் பெயரை மாற்றி பேசுவதா என தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Topics: Chennai News Live

 

LEAVE A REPLY