‘‘தடையை மீறி நடந்தால் தப்பில்லை’’ அன்புமணி கொந்தளிப்பு!

இந்த ஆண்டு பொங்கலுக்காவது ஜல்லிக்கட்டை நடத்த அவசர சட்டம் கொண்டுவரவேண்டும் என்று பல்வேறு கட்சிகளும் அமைப்புகளும் மத்திய அரசை வலியுறுத்திவருகின்றனர். இதனைத்தொடர்ந்து, மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்று போராட்டங்களும் நடைபெற்றுவருகிறது.

அதிமுக எம்பிக்களும் இன்று மத்திய அமைச்சரை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளனர். தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் அளித்த பேட்டியில், ஜல்லிக்கட்டு உறுதியாக நடக்கும் என தெரிவித்தார். அதிமுகவின் பொதுச்செயலாளரான வி.கே.சசிகலா பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவரும் எம்பியுமான அன்புமணி ராமதாஸ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ஜல்லிக்கட்டு 5 ஆயிரம் ஆண்டு பழமையான விளையாட்டு எனவும், விவசாயத்திற்காக உழைக்கக்கூடிய காளைகளை நாங்கள் ஏன் துன்புறுத்துவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

காவிரி பிரச்சனையில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை கர்நாடகாவே மதிக்கவில்லை. தமிழர்களின் பராம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை தடையை மீறி நடத்துவதில் தவறில்லை. தடையை மீறி ஜல்லிக்கட்டை நடத்தினால், சிறையில் தானே போடுவார்கள், போடட்டும் என்று ஆக்ரோஷமாக பேசினார்.

Related Topics: Chennai News Live

LEAVE A REPLY