தமிழக முதன்மை செயலாளருக்கு எச்சரிக்கை!

மாநிலம் முழுவதும் கொசுத் தொல்லை அதிகமாக காணப்படுவதால் அதனை ஒழிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என ரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனு மீதான விசாரணை உயர்நீதிமன்ற மதுரை கிளை விசாரித்ததில், தமிழக முதன்மை செயலாளர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர்கள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், கால அவகாசம் முடிந்தும் இதுவரை பதில் மனு தாக்கல் செய்யவில்லை. இந்த மனுவை நேற்று விசாரணைக்கு எடுத்த நீதிபதிகள் பதில் மனு தாக்கல் செய்யாததை கண்டித்து தமிழக முதன்மை செயலாளர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும் கால தாமதம் செய்தால் நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும் என நீதிபதிகள் கூறினார். இதனையடுத்து, வழக்கை வரும் 17ம் தேதிக்கு ஒத்திவைத்தது நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Topics: Chennai News Live

LEAVE A REPLY