ஒருவர் 10,000 ஆன்லைனில் செலவழித்தால்.. 24 லட்சம் கோடி ஊழல்.. அம்மாடியோவ்

ஒருவரின் மாத சம்பளம் 10000 ரூபாயை.. அவர் பணமாக செலவழிச்சா 10000 க்கும் செலவு செய்யலாம். ஆனா அதையை அவர் வங்கி மூலமா DIGITAL money செலவழிச்சா சேவை கட்டணம் 15% *10000 = 1500 ரூ போக அவரால் 8500 மட்டுமே செலவழிக்க முடியும். இதே 130 கோடி பேருக்கு 1500 * 130கோடி = 1,95,000கோடி ரூபாய் சேவை கட்டணமாக மாதம் மாதம் வங்கிக்கோ அல்லது கும்பானிக்கோ போகும். ஒரு வருடத்துக்கு 24 லட்சம் கோடி சேவை கட்டணம். இதுதான்டா உலக மகா ஊழல். நாட்டின் மொத்த பணத்தையும் அச்சடிக்க வெறும் 12 ஆயிரம் கோடியே போதும்.
இதுக்கு பேர்தான்டா சர்வாதிகாரம். இதப்பத்தி கொஞ்சம் யோசிங்க…
ஏன் இந்தியா மற்ற நாடுகளை போல முன்னேறக்கூடாதா?…
மக்கள் டெபிட் கார்டு, நெட்பேங்கிக்லாம் பயன்படுத்தகூடாதா?…
ஆன்லைன் பரிவர்தனைகள் வரக்கூடாதா?…
ஏன் டீக்கடைல ஜீணீஹ்tஹ்னீ மெசின் யூஸ் பன்னகூடாதா? வளரச்சிடா! கவர்ச்சிடா! மோடிடா!

டெபிட்கார்டு பயன்படுத்துவதையும், ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் செய்வதையும் ஒரு நாட்டின் வளர்ச்சியின் அடையாளமாக உங்களுக்கு சொல்லிக்குடுத்தது யார்?

நாட்டின் வளர்ச்சிதான் தான் நோக்கம என்றால், க்யூபா மாதிரி நாடு முழுவதும் கல்வியை இலவசமாக்கி சட்டம் இயற்று, கல்வி நிறுவனங்களை பொதுவுடைமையாக்கு, கல்வி வியாபாரத்தை 100% ஒழிக்க சட்டம் இயற்று. அது நாட்டை முன்னேற்றும்.

அரபுநாடுகள் குருடாயிலை அவர்களின் மூலதனமாக ஆக்கியது போல, இந்தியாவின் அடையாளமாகிய விவசாயத்தை மூலதனமாக்கு, விவசாய அழிவை தடுக்க சட்டம் இயற்று. அது நாட்டை முன்னேற்றும்.

பொது துறைகளில் தனியார் முதலீட்டை 100% தடை செய்து அரசின் வருமானம் முழுவதும் நாட்டிற்கே என்று சட்டம் இயற்று.

வளங்களை சுரண்டும் கோலா, கார் கம்பெனிகள் போன்ற அந்நிய முதலீடுகளை தடுத்து அதிகபட்ச FDI அளவை 10% கீழே கொண்டுவா. அதுவும் அத்தியாவசிய பொருள்களுக்கான முதலீடாக இருக்குமாறு விதிமுறைகளை உண்டாக்கு.

உற்பத்தி வரி, சேவை வரியை குறைத்து தொழில்முனைவோரை ஊக்கப்படுத்து. நாட்டின் ஏற்றுமதியை உயர்த்தி அந்நிய செலாவனியை அதிகரிக்க சட்டம் இயற்று.

LEAVE A REPLY