ஜல்லிக்கட்டுக்கு போராடிய மாணவர்களுக்கு நடிகர் சிம்பு பாராட்டு..!

ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும் என்று மதுரையில் மாணவர்கள் அமைப்புகள் இன்று பேரணி நடத்தினர். இந்த பேரணியில் மாணவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.

இது பற்றி சென்னையில் நடிகர் சிம்பு செய்தியாளர்களிடம் பேசியதாவது: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வலியுறுத்தி மாணவர்கள் அமைப்புகள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பேரணி நடத்திய அனைத்து மாணவர்களுக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும், மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தடியடி போராட்டத்திற்கு கண்டனத்தை தெரிவித்தார். ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடத்த வலியுறுத்தி தனது ஆதரவை சிம்பு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Topics:Chennai News

LEAVE A REPLY