தமிழகத்தில் பாஜகவை பலப்படுத்திக்கொண்டு வருகிறோம்.. தமிழிசை தகவல்.!

தமிழகத்தில் பாஜகவை பலப்படுத்திக்கொண்டு வருகிறோம் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: தமிழகத்தில் இருதுருவ அரசியல் முடிவுக்கு வர வேண்டும். தமிழகத்தில் பாஜ மாற்று சக்தியாக உருவெடுத்து வருகிறது. கட்சி அடிப்படையில் பலம் மிகுந்த கட்சியாக மாற்றும் முயற்சியில் பாஜகவினர் ஈடுபட்டுள்ளோம்.

மேலும், தமிழகத்தில் கடும் வறட்சி நிலவுகிறது இதனால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு உடனடியாக நிவாரணத்தை வழங்கி விவசாயிகளின் குடும்பங்களை காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Topics:Chennai News

LEAVE A REPLY