டிக்கெட் எடுத்தவர்கள் கவலை வேண்டாம்.. ரெட் பஸ் விளக்கம்..!

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரெட் பஸ் இணையதளம் மூலம் பேருந்து டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் கவலை அடைய வேண்டாம் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது பற்றி ரெட் பஸ் இணையதளத்தின் மூத்த இயக்குநர் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். பயணிகளின் பாதுகாப்பு மற்றும் சேவைத் தரத்தை பராமரிக்காத சில பேருந்து உரிமையாளர்கள் தங்கள் இணையதளத்தில் இருந்து வெளியேறியுள்ளனர்.

அவ்வாறு வெளியேறியவர்கள் டிக்கெட் முன்பதிவு குறித்து தவறான செய்திகளை பரப்பி உள்ளனர்.

ரெட் பஸ் இணையதளம் மற்றும் ஆப் மூலம் 12ம் தேதி முதல் 17ம் தேதி வரையான பேருந்து சேவைகளுக்கு முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகள் செல்லாது என ஆம்னி பேருந்து உரிமையாளர்களில் ஒரு பிரிவினர் தெரிவித்திருந்த நிலையில் ரெட் பஸ் விளக்கம் அளித்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Related Topics:Chennai News

LEAVE A REPLY