பொங்கல் பரிசு பொருட்களை ஜன.30 வரை பெறலாம்..!

பொங்கல் இலவச பொருட்களை ஜனவரி 30ம் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம் என்று புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது. இது பற்றி, புதுச்சேரி அரசு நுகர்வோர் துறை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி அரசு அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை 1 கிலோ, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பச்சை பருப்பு, வெல்லம், முந்திரி பருப்பு, உலர் திராட்சை, ஏலக்காய் மற்றும் 9 விதமான பொருட்களை இலவசமாக ரேஷன் கடைகள் மூலம் தற்போது வழங்கப்படுகிறது.

இதனையடுத்து இலவச பொருட்களை அனைத்து குடும்ப உணவு பங்கீட்டு அட்டை தாரர்களும், இந்த மாதம் 30ம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

Related Topics:Chennai News

LEAVE A REPLY