கர்ப்பிணி மனைவியை கொடூரமாக கொன்ற கணவன் கைது..!

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே கர்ப்பிணி மனைவியை கத்தியால் குத்தி கொன்ற கணவனை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை சேர்ந்தவர் வெங்கட்ராமன் இவரது மனைவி நாகம்மாள் (32), இவருக்கும், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் (29), என்பவருக்கும் நட்பு ஏற்பட்டு இருவரும் கணவன் மனைவியை போன்று கடந்த 7 ஆண்டுகளாக வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில், தற்போது 5 மாத கர்ப்பிணியாக இருந்த நாகம்மாளுக்கும், மணிகண்டனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது திடீரென்று மணிகண்டன் காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து நாகம்மாளை குத்தி கொலை செய்தார்.

இதனையடுத்து அவர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். போலீசார் மணிகண்டன் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Topics:Chennai News

LEAVE A REPLY