விவசாயிகளுக்கு உதவுங்கள் தலைமை நீதிபதி கவுல் வேதனை..!

தமிழகத்தில் கடும் வறட்சியினால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சாகுபடி செய்த பயிர்களை பார்த்து விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதும், அதிர்ச்சியில் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விவசாயிகளின் நிலைமை கண்டு வேதனை தெரிவிப்பதாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கவுல் தெரிவித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க பொங்கல் விழாவில் கலந்து கொண்டார்.

இதில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது: தமிழகத்தில் விவசாயிகள் வறட்சியால் தற்கொலை செய்து கொண்டது மிகவும் வேதனை அளிப்பதாகவும், விவசாயிகளுக்கு வழக்கறிஞர்கள் முடிந்த அளவு உதவி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

Related Topics:Chennai News

LEAVE A REPLY