பேருந்து நிலையத்தில் பெண்ணிடம் அத்துமீறிய போலீசார்.. மனித உரிமை ஆணையம் வழக்கு..!

பெங்களூர் செல்வதற்காக நேற்று அன்னப்பூர்ணா என்ற மாணவி கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது திடீரென்று மயக்கம் வந்துள்ளது இதனால் மாணவி கீழே அமர்ந்து சிறிது நேரம் ஓய்வு எடுத்துள்ளார். இதனையடுத்து அங்கு வந்த போலீசார் மாணவியிடம் அத்துமீறி நடந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக நேற்று அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பானது. இதனையடுத்து மாநில மனித உரிமைகள் ஆணையம் வழக்காக பதிவு செய்துள்ளது. இது பற்றி அந்த பெண் அமைச்சரிடமும் முறையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பெண் துன்புறுத்தல் குறித்து தாமாக முன்வந்து மாநில மனித உரிமை ஆணையம் வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும், டி.எஸ்.பி அளவிலான போலீஸ் அதிகாரிகள் விசாரித்து அறிக்கையை 8 வாரத்தில் சமர்பிக்க உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது.

Related Topics:Chennai News

LEAVE A REPLY