கிருஷ்ணா நதி நீருக்காக ஆந்திரா செல்லும் பன்னீர்செல்வம்..!

தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு விவகாரம் பற்றி பேசுவதற்காக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து பேசுவதற்காக அமராவதி செல்கிறார்.

இது பற்றி தமிழக அரசு வெளியிட்டுள்ள செயதிக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது இதனால் போதுமான தண்ணீரை பெறுவதற்காக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆந்திர மாநிலம், அமராவதியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து பேசுகிறார்.

தமிழக வரலாற்றில் முதன்முறையாக தமிழக முதலமைச்சர் ஒருவர் ஆந்திர முதல்வரை நேரில் சந்தித்து வலியுறுத்துவது இதுவே முதன்முறையாகும்.

Related Topics:Chennai News

LEAVE A REPLY