அஜித்தை மறைமுகமாக தாக்கிய டி.ஆர்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனை கண்டித்து தமிழகத்தில் தமிழர்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்த துவங்கி உள்ளனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இன்று சிம்பு பேசி உள்ளது தமிழகம் முழுவதும் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் பேட்டியின் போது விஷாலை மறைமுகமாக தாக்கி இருந்தார்.

இதனை அடுத்து சிம்புவின் தந்தையும், இயக்குனருமான டி.ராஜேந்தரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்து பேட்டி அளித்தார். அப்போது சில நடிகர்கள் படத்தின் தலைப்புகளில் மட்டும் வீரம் இருந்தால் போதாது நிஜத்தில் வீரம் வேண்டும் என்று கூறினார்.

இது அஜித் ரசிர்களை கோபம் அடைய செய்துள்ளது. ஏனென்றால் அஜித் வீரம் என்ற தலைப்பில் நடித்து இருந்தார். அஜித்தை குறி வைத்து மறைமுகமாக தாக்கிய டி.ஆரை தல ரசிகர்கள் நெட்டில் வறுத்தெடுத்து வருகிறார்கள்.

LEAVE A REPLY